வாக்கு எண்ணிக்கைக்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

செய்தி:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (மே-4) எண்ணிக்கை.

62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு. 18 ஆயிரம் போலீசார், துணை ராணுவப் படையினர் குவிப்பு.

கோவிந்த் கமெண்ட்:

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்த அன்றே சென்னை உள்ளிட்ட சில இடங்களில், திமுகவினருக்கும் தவெகவினருக்கும் நேரடியான மோதல் நடந்தது.

திருச்சி உள்ளிட்ட தொகுதிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு எந்திரங்கள் இருந்த அறைக்குள் அதிகாரிகள் புகுந்ததாக செய்திகளும் புகார்களும் வெளியாகின.

அண்மையில் சென்னையில் நடந்த தவெக கூட்டத்தில் விஜய் வெளிப்படையாக வாக்கு எண்ணிக்கை நாளன்று கூடுதலான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்திருக்கிறார்.

அதையொட்டி தற்போது கூடுதலாக காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

வாக்களித்த மக்கள் எல்லாவற்றையும் பொறுமையுடன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

You might also like