ச.தமிழ்ச்செல்வனுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது!

இந்திய மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது ‘சாகித்ய அகாடமி’. கவிதை, நாவல், சிறுகதை, இலக்​கிய ஆய்வுகள் அடிப்படையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.

2025-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்கான எழுத்தாளர்களைத் தேர்வு செய்ய அதன் நிர்வாகக் குழு கூட்டத்தில் விருதுக்கான எழுத்தாளர்கள் யார் என்பது விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

அந்த வகையில், 2025-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ச. தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள ‘தமிழ் சிறுகதையின் தடங்கள்’ நூல், தமிழ் சிறுகதை இலக்கியத்தின் தோற்றம் தொடங்கி, அதன் பல்வேறு காலகட்ட வளர்ச்சி மற்றும் சமூக மாற்றங்கள் சிறுகதைகளில் எவ்வாறு எதிரொலித்தன என்பதை மிக விரிவாகவும் நுட்பமாகவும் ஆராய்கிறது.

விருது குறித்து பேசிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், “இந்தப் புத்தகத்தை எழுத 2 ஆண்டு காலம் ஆனது. 50-க்கும் மேற்பட்ட கதைகளை வாசித்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

 
You might also like