வளைகுடா நாடுகளின் மீது போர்: ஓர் மறுப்புக் குரல்!

துபாய் – பாலைவனத்தில் இருந்து எழுந்த கண்ணாடி நகரம்.

ஆசியா, ஆப்பிரிக்கா, அரபு, தமிழ், மலையாளம், உருது, ஆங்கிலம் என அனைத்தையும் தாங்கி நிற்கும் மனிதக் கலவையின் நகரம்.

இந்த நகரத்தின் மீது போர் என்று சொல்வது, ஒரு புவியியல் வரைபடத்தைத் தாக்குவது அல்ல;
அதில் உழைக்கும் ஆயிரம் தமிழர்களின் கனவுகளைத் தாக்குவது.

1. போர் வந்தால் முதலில் சிதறுவது கண்ணாடி கோபுரம் அல்ல – அடையாளமற்ற பாஸ்போர்ட்.

2. வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் என்றால் உலக வர்த்தகத்தின் ஓட்டத்தில் தடம் புரளல்.

எரிபொருள் விலைகள், கடல்சார் வர்த்தகம், விமானப் போக்குவரத்து – அனைத்தும் ஒரே நேரத்தில் அதிரும்.

இது ஒரு நகரத்தின் பிரச்சனை அல்ல, உலகச் சந்தையின் நரம்பு அறுபடுதல்.

3. சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கிப் பறக்கும் விமானங்கள் வழக்கமாகக் கனவுகளை எடுத்துச் செல்கின்றன.

அந்தக் கனவுகள் மீது போர் என்றால், அது வெறும் அரசியல் தீர்மானமல்ல – அது சமூக வன்முறை.

4. போர் என்பது தீர்வு அல்ல. போர் என்பது அதிகாரத்தின் தோல்வி. துபாய் மீது போர் வேண்டாம்.

அரபு நிலத்தின் மீது தீ வேண்டாம். மனிதர்களின் வாழ்வாதாரத்தின் மீது குண்டு வேண்டாம்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

நாம் உலகக் குடியினர். நமது குரல் – போருக்கு எதிரான ஒற்றை மொழி.

போர் என்பது மனிதனின் பின் நோக்கம். அமைதி தான் மனிதனின் எதிர்காலம்.

– கலை விமர்சகர் இந்திரன்

You might also like