வாசிப்பின் ருசி:
“காந்தியையும், நேருவையும் பார்க்க வேண்டுமென்று கேட்டோம். அதற்கு இது நடுநிசி, அவர்கள் உறக்கத்தில் உள்ளார்கள். விடிந்த பிறகு அனுமதி பெற்று வாருங்கள் என்றே பதில் கிடைத்தது.
ஆனால், இங்கே நாங்கள் வந்து பார்த்தால், நீங்கள் இந்த நடு இரவிலும் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறீர்களே” என்று நிருபர்கள் கேட்டதற்கு, பாபா சாகேப் அம்பேத்கர் சொன்ன பதில்:
“காந்தியும், நேருவும் வாய்ப்பானவர்கள் (Lucky leaders), அவர்களைப் பின்பற்றுவோர் எப்போதும் விழித்திருக்கிறார்கள். எனவே இவர்கள் தூங்குகிறார்கள்.
எனது நிலைமை அப்படியில்லையே! என்னைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் தூங்கிக் கொண்டே உள்ளதால், அவர்களுக்காக இந்த நடுநிசியிலும் விழித்திருப்பதைத் தவிர எனக்கு வேறு கடமை இல்லையே!” என்று கூறினார் டாக்டர் அம்பேத்கர்.
– திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி எழுதிய டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும் என்ற புத்தகத்திலிருந்து…