பணம் பற்றி சூப்பர் ஸ்டார்கள் சொல்வது உண்மையா?

“பணம் வாழ்க்கையில் ஒரு பொருட்டே இல்லைன்னு ரஜினி, அனிருத் மாதிரி ஆட்கள்லாம் சொல்றாங்களே சார்?” என்று இளம் நண்பர் ஒருவர் என் கருத்தைக் கேட்டார்.

நான் சொன்னேன்: “ஆமாம். சூப்பர் ஸ்டார்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் இதைச் சொல்லி வருகிறார்கள். ஆனால், அந்தத் தத்துவத்தை நம்மிடம் பணம் ‘வாங்குபவர்கள்’ சொல்ல வேண்டும்.

பள்ளிக் கூடம், பெட்ரோல் பங்க், வீட்டு உரிமையாளர், மருத்துவர் என எல்லோரும், “பணம் ஒரு பொருட்டே இல்லை, சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்ல வேண்டும்.

கடைக்காரர்கள், “பணம் இன்னைக்கு வரும், நாளைக்குப் போகும், உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று சொல்லவேண்டும்.

அல்லது அந்தப் பெரும் நட்சத்திரங்கள், தங்களுக்குப் பணம் ‘தரும்’ தயாரிப்பாளர்களிடமோ, ரசிகர்களிடமோ “பணம் எதற்கு? நான் இலவசமாக நடிக்கிறேன், ரசிகர்கள் டிக்கட் வாங்காமல் இலவசமாகப் படம் பார்க்கட்டும்,” என்று சொல்ல வேண்டும்.

அப்படி நடக்கிறதா? இல்லையே?

ஆகவே, முதலில் நன்றாகச் சம்பாதியுங்கள், சேமியுங்கள், முதலீடு செய்யுங்கள்.

பணத்தின் பயனற்ற தன்மையைப் பற்றிப் புலம்பும் அளவுக்குப் பணக்காரர் ஆன பிறகு, நீங்களும் அதைப் பற்றிப் பேசலாம். முதலில் செல்வம் வளர்ப்பது முக்கியம்,” என்றேன்.

  • ஸ்ரீதரன் மதுசூதனன் முகநூல் பதிவு
 
You might also like