#MahaswetaDevi #Mahasweta #BengaliWriter #Sugathakumari #MalayalamPoet #WomenWriters #FeministWriting #SocialJustice #LiteraryActivism #HumanRights #ArundhatiRoy #ArundathiRoy #VoiceOfDissent #IndianLiterature #மஹாஸ்வேதாதேவி #வங்காளிஎழுத்தாளர் #சுகதகுமாரி #பெண்எழுத்தாளர் #பெண்ணியஎழுத்து #சமூகநீதி #இலக்கியபோராளி #அருந்ததிராய் #எதிர்ப்பின்_குரல் #மீனாம்பாள்சிவராஜ் #முத்துலெட்சுமிரெட்டி #டாக்டர்முத்துலெட்சுமிரெட்டி #பெரியார் #பேரியாரியசிந்தனை #சுயமரியாதை #சமூகசீர்திருத்தம் #தேவதாசிமுறை #DevadasiSystem #சாதியஅடக்குமுறை #பெண்உரிமை #மான்புக்கர் #HumanDignity #Equality
1. வங்காளியில் ஒரு மஹாஸ்வேதா தேவி ஆதிவாசி மக்களுக்காக இறங்கிப் போராடிய ஒரு உன்னதமான பெண் எழுத்தாளர்.
2. மலையாளத்தில் ஒரு சுகதகுமாரி. பிருக்ரதி சம்ரட்சனா சமிதி என்ற அமைப்பை உருவாக்கி இயற்கையைப் பாதுகாப்பதின் மூலம் சூழலியல் சீர்கேடுகளை எதிர்த்துப் போராடும் அதே நேரத்தில் இலக்கியத்தில் கவிதையில் தனி முத்திரை பதித்தவர்.
3. ஆங்கிலத்தில் ஒரு அருந்ததி ராய் இந்தியாவிலேயே முதன்முதலாக மான் புக்கர் பரிசு பெற்று, மனித உரிமை, சூழலியல் ஆகியவற்றில் ஒரு கருத்துப் போராளியாக இன்றைக்கும் திகழ்ந்து வருபவர்.
தமிழில் இவர்களுக்குச் சரிசமமாக உள்ள மூத்த பெண் எழுத்தாளர் தமிழில் இருக்கிறார்களா என்றால் இல்லை.
அரசியலில் தேவதாசி முறையை ஒழித்த ஒரு முத்துலெட்சுமி ரெட்டியைப் போல, பெரியாருக்குப் ‘பெரியார்’ எனும் பட்டம் கொடுத்த மீனாம்பாள் சிவராஜ் போல, மக்களோடு இறங்கிப் போராடிய மூத்த பெண் இலக்கிய ஆளுமைகள் ஏன் இல்லை?
தமிழ்நாட்டின் சமூகம் ஏன் இத்தகையவர்களை உருவாக்கத்தவறி விட்டது என்று சமூகவியல் நோக்கில் நாம் சிந்திக்க வேண்டும்.
அப்போதுதான் இன்றைய பெண் எழுத்தாளர்கள் சீரிய எழுத்தாளர்களாக எதிர்காலத்தில் திகழ வாய்ப்பு ஏற்படும்.
இன்றைய பெண் எழுத்தாளர்கள் பலரை எனக்குத் தெரியும். அவர்கள் நாளை இத்தகைய ஆளுமைகளாக உருவாக வாய்ப்பிருக்கிறது.
போட்டி, பொறாமை இன்றி, சாதி எனும் பூட்டிய அறைக்குள் அடைபடாமல், சுயநல நோக்கமின்றி தொடர்ந்து நேர்மையுடன் போராடினால் நமக்கும் ஒரு மஹாஸ்வேதா தேவி கிடைக்காமலா போய் விடுவார்?
– நன்றி: புதிய மாதவி சங்கரன் பதிவு