வன்முறையற்ற வாழ்வை நோக்கி!

நூல் அறிமுகம்:

இந்தியாவில் குடிமகள் என்ற அடிப்படையில் எழும்போது ஒடுக்குமுறையோடு, சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய 3 மட்டங்களில் பெண் ஒடுக்கப்படுகிறாள்.

இந்த ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் முக்கிய காரணிகளாக அமைகின்றன. அனைத்து மட்டங்களிலும், அவள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது.

எனவே, வன்முறைக்கு எதிரான பொதுக்கருத்தும், பொது கோபமும் உருவாக்கப்படுவதோடு, எதை நிலைநிறுத்த வன்முறை பயன்படுகிறதோ அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான உணர்வாகவும் அதை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது.

எவையெல்லாம் காரணிகளாக உள்ளனவோ, அவற்றைத் தகர்க்கவும் போராட வேண்டியிருக்கிறது என்பதை விரிவாக இந்நூலில் எடுத்துரைக்கிறார் ஆசிரியர் உ.வாசுகி. 

ஆசிரியர் உ.வாசுகி பற்றி:

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய உ.வாசுகி, பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்த பல்வேறு போராட்டங்களில் மாநிலம் முழுவதும் பிரேமானந்தா, சிதம்பரம் பத்மினி போன்ற போராட்டங்கள் உள்ளிட்டு முக்கியப் பங்காற்றியவர்.

கோகோ கோலாவை எதிர்த்து சிவகங்கை படமாத்தூரில் நடைபெற்ற போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர்.

இந்தியப் பொதுத் தேர்தல், 2014-ல் வடசென்னை மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) இன் வேட்பாளராக நின்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக சேவையாற்றியவர்.

அதேபோல் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, விடுதி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும், உத்தப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டவர்.

மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

**********

நூல்: பெண் – வன்முறையற்ற வாழ்வை நோக்கி
ஆசிரியர்: உ. வாசுகி
பாரதி புத்தகாலயம்

You might also like