சென்னையில் பெண் இசைக்கலைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் டிசம்பர் 7 ஆம் தேதியன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நாயகி என்ற நிகழ்வை நடத்துகிறார்கள்.

இதுபற்றிய பதிவை கவிஞர் பாலைவனலாந்தர் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘இசை நாயகி’ நிகழ்வில் ‘இஸ்லாமிய மரபிசையில் பெண்கள்’ குறித்து பேசியாக வேண்டியிருக்கிறது என்று நாங்கள் முடிவெடுத்தபோது அதில் உரை நிகழ்த்தும் அளவுக்கு பெண்களின் பங்களிப்பு இருக்குமா என்று தயங்கினோம்.

ஆனால், ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்கிறபோது ஏற்படுகிற வியப்பில் இருந்து நாங்கள் மீளவில்லை. இந்த வியப்பை எங்களுக்குத் தந்தவர் திருமிகு மீரான் மைதீன்.

மீரான் மைதீன் அவர்கள் எழுத்தாளர். இஸ்லாம் என்பது வாழ்வியல் முறை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவர். இசைக்கு இஸ்லாம் தந்திருக்கிற முக்கியத்துவத்தை\நன்கு உணர்ந்தவர்.

பெண்களுக்கும் இஸ்லாமிய மெய்ஞான இசைக்கும் உள்ள தொடர்\பை அவர் விவரித்த விதம் சிறப்பானது. பெண்களிடத்தில் கிஸாக்கள், மசாலாக்கள் என்று சொல்லப்படுகிற பாட்டுகளின் வகைமை இருந்திருக்கிறது,. இதனை பெண்கள் அடுத்தத் தலைமுறைக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள் என்கிறார்.

மெய்ஞான மரபில் பெரும் பங்காற்றிய மூன்று சூஃபியாக்களைப் பற்றியும் மேலும் பலரைக் குறித்தும் அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.

அவர்கள் இசைக்கு செய்த பெருங்கொடையையும், அதன் மரபு பரப்பிய ஞானத்தையும் அவர் உரையில் விவரிக்க உள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பில் அவரது உரையைக் கேட்க இருக்கிறோம். மேம்போக்காக அவர் எதையும் அணுகி எழுதுவதில்லை என்பதை அவரது படைப்புகளில் அறிந்து கொள்ள முடியும். இந்த உரையையும் மிகுந்த சிரத்தையுடன் தயாரித்து வருகிறார்.

‘இசை நாயகி முழு நாள் கருத்தரங்கில் மீரான் மைதீன் அவர்களின் உரை முக்கிய ஆவணமாகப் பதிவாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நாஞ்சில் நாட்டில் இருந்து எங்கள் அழைப்பை ஏற்று வருகை தரவிருக்கும் மீரான் மைதீன் அவர்களை வரவேற்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறோம்.

மீரான் மைதீன் உரையைத் தொடர்ந்து சூஃபி, மாப்ள பாடல் கச்சேரியும் உள்ளது. சிறந்ததொரு அனுபவமாக அமையும் என்று உறுதி தருகிறோம்.

You might also like