சினிமாவுக்கான பிம்பங்களை உடைத்த ’16 வயதினிலே’!

அருமை நிழல்:

தமிழ்த் திரைப்பட உலகில் ‘16 வயதினிலே’ ஒரு மைல் கல். ‘திரைப்படம் என்றால் இப்படியெல்லாம் இருக்கும்’ என்ற கற்பிதங்களை உடைத்த படம்.

அன்றைய புதுவரவு இயக்குநர் பாரதிராஜா. அவரே கதை எழுதி, அவரே இயக்கிய மிகச் சில படங்களில், இந்தப் படம் மிகவும் முக்கியமான படம்.

‘சப்பாணி’, ‘மயில்’, ‘பரட்டையன்’ என்று படத்தின் டைட்டிலில் முக்கியமான கதாபாத்திரங்களின் கதாபாத்திரத்தின் பெயரையே ஓடவிட்டதிலிருந்து அந்தப் படத்தின் புதுமை தொடங்குகிறது.

‘சப்பாணி’ என்ற கேரக்டரே அன்றைக்குப் புதுமைதான்.

கமல் கோமண உடையில் தோன்றுவது ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றால், ரஜினியின் முகத்தில் ஸ்ரீதேவி துப்பும் காட்சி இன்னொரு வித அதிர்ச்சி.

இந்தப் படம், கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகியோருக்குத் தங்களின் ‘கரியரில்’ ஒரு லிஃப்ட் ஆகப் பயன்பட்டது என்றால், சிலருக்கு ‘லான்ச் பேட்’ ஆக உதவியது.

குறிப்பு: பதினாறு வயதினிலே படப்பிடிப்பில் பாரதிராஜா உடன் கமல் மற்றும் ஶ்ரீதேவி.

You might also like