நூல் அறிமுகம்:
பூவராகன் பழனியப்பன் (பிறப்பு: நவம்பர் 5, 1930) ஒரு இந்திய மகப்பேறு மருத்துவர்.
மருத்துவத் துறையில் இவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மார்ச் 29, 2006 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இடமிருந்து பத்மஸ்ரீ விருது கிடைத்தது.
டாக்டர் பூ.பழனியப்பன் தனது மருத்துவப் பட்டப்படிப்பை சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியிலும், முதுகலை அறுவை சிகிச்சை பட்டத்தை சென்னை எழும்பூர் மகப்பேறு மற்றும் பெண்கள் நோயியல் மருத்துவமனையிலும் பெற்றார்.
இவர் பத்தாண்டு காலத்துக்கும் மேலாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத் துறைத் தலைவராக மிகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
தமிழ் ஆங்கில மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், பல நூல்களையும் எழுதியுள்ளார்.
மருத்துவக் கல்வி கற்பிப்பதற்கான பாட நூல்களாக அவற்றில் சில இன்றும் விளங்குகின்றன.
மகப்பேறு மருத்துவம் மற்றும் என்டோஸ்கோபி அறுவை சிகிச்சையில் தனது செயல்திறனை விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் எஸ்.ரத்தினம் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இவர் எழுதியுள்ள நூல்தான் ‘அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்’.
தற்போதுவரை எந்தெந்த நோய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எதனால் அந்த நோய்களின் தாக்கம் அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த அரசும் மக்களும் எடுக்க வேண்டிய அவசியமான நடவடிக்கைகள் என்ன,
மற்ற நோய்களிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பனவற்றை இந்த நூல் வழியே தந்திருக்கிறார் மருத்துவர் பழனியப்பன்.
வாய்ப்பிருப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.
******
நூல்: அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்
எழுத்தாளர்: டாக்டர் பூ. பழனியப்பன்
பக்கங்கள்: 200
விலை: ரூ. 95/-