உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் பாடல்களில் வெளிப்படுத்திய பட்டுக்கோட்டையார்!

நூல் அறிமுகம்:

பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்கப் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமிழ் மண்ணில் மக்கள் கவிஞராக நிரந்தரமாக வீற்றிருப்பவர்.

கருத்துப் புதுமையும் இசை வளமும் காலத்தின் குரலும் இணைந்து பட்டுக்கோட்டையாரின் திரையிசைப் பாடல்கள் ஒலித்தட்டுகளிலும் வானொலியிலும் உலா வந்த காலந்தொட்டு மக்களால் ரசித்துக் கேட்கப்பட்டவை.

உழைக்கும் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி உற்சாகமளித்தவை.

திரையிசைப் பாடல்களிலும் கனிமையும் இனிமையும் கூட்டிப் படைக்க முடியுமென்பதை சாதித்துக் காட்டிய பட்டுக்கோட்டையின் இசைத் தமிழ் இலக்கியம் இத்தொகுப்பாகும்.

*****

ஆசிரியர் : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்
எழுத்தாளர் : பி.இ. பாலகிருஷ்ணன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள் : 302
விலை: ரூ. 130/-

You might also like