பசி, பட்டினி இல்லாத உலகை உருவாக்குவோம்!

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவு.

இதேபோல் மனிதன், நோய் நொடியின்றி உயிர்வாழத் தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாகத் தான் நமக்கு கிடைக்கிறது.

அத்தகைய உணவைச் சிறப்பிக்க, உலக உணவு தினம், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ எனப் பாடினார் பாரதி. ஆனால், இந்தியாவில் தினமும் பல கோடி மக்கள் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்கிறார்கள். பல கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள்.

உலகிலேயே அதிகப்படியான அளவாக இந்தியாவில் 20 கோடிப் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான உணவை விவசாயிகள் தயாரித்துத் தந்தாலும், பசி என்பது இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. உலகில் 73 கோடியே 30 இலட்சம் பேர் இன்னும் பசியால் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

உலகில் 10 பேரில் வருவர் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார்.

உலகளவில் 5 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒருவர் வளர்ச்சி குறைவாக உள்ளார்.

உலகில் இறக்கும் குழந்தைகளுள் பாதி பேர் சத்துணவின்மையால் உயிரிழக்கின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் பசி தொடர்புடையவைகளால் உயிரிழக்கும் 90 இலட்சம் பேரில் பெரும்பான்மையினோர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள்.

உணவைப் இன்றைய உலகில் 35 விழுக்காட்டு மக்கள், அதாவது 280 கோடி பேர் ஆரோக்கியமான உணவை பெறவதற்கான வசதியற்றவர்களாக இருக்கின்றனர்.

குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 71.5 விழுக்காட்டு மக்கள் பெறுவதற்கான  ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்கான வசதிகளின்றி உள்ளனர்.

அதேவேளை, வருமானம் நிரம்பிய நாடுகளிலோ 6.3 விழுக்காட்டு மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்குவதற்கான வசதிகளின்றி உள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 1945-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் நாள் தொடங்கப்பட்டது. 1979-ம் ஆண்டு ஐநா சபையின் 20-வது பொது மாநாட்டில் அக்டோபர் 16-ம் நாள் உலக உணவு தினமாக அறிவிக்கப்பட்டது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் கடந்துவிட்டாலும் உலகின் அனைத்து மக்களுக்கும் பொதுவாக, சரிவிகிதமான உணவு கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை.

2025-ம் ஆண்டுக்கான உலக உணவு நாள் கருப்பொருள், “சிறந்த உணவுக்கும், சிறந்த எதிர்காலத்திற்கும் கை கோர்ப்போம்”.

உணவுக்கான உரிமை ஒரு அடிப்படை மனித உரிமை என்பதையும், அனைவருக்கும் உணவு சமமாக பகிர வேண்டிய நம்முடைய பொறுப்பையும் இந்த கருப்பொருள் நினைவூட்டுகிறது.

பசியால் அதிக அளவில் வாடும் நாடுகளாக 36 நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் புகண்டி, சாடு, மடகாஸ்கர், சொமாலியா, தென்கூடான், மற்றும் ஏமன் அகியலை மிகவும் கடுமையான உணவுப் பற்றாக்குறை உள்ள நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உலக உணவு தினம் என்பது அளவுக்கு அதிகமாக உண்பதை தவிர்க்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முடிவுகளை எடுக்கவும் நினைவூட்டுகிறது.

விவசாய நாடான இந்தியாவில், இத்தினத்தில் பல பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், மற்றும் சமூக சேவை அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், உணவு நன்கொடை இயக்கங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தி, உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாயம் மற்றும் நவீன விவசாய நடைமுறைகள் குறித்து வலியுறுத்துகின்றன.

உணவின் முக்கியத்துவத்தை குழந்தைகளை எடுத்துச் சொல்லி அவர்களை உணர வைத்து உணவை வீணாக்காமல் இருக்கப் பழக்குவோம்.

நமக்கு அடுத்த தலைமுறைக்கு பசி, பட்டினி இல்லாத உலகை விட்டுச்செல்லும் வகையில் குழந்தைகளை வழிநடத்துவோம்.

– மணி அமுதன்

You might also like