காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, நேற்று (02.10.2025) காலை 6.30 மணியளவில் மது, போதை மறுப்பு மக்கள் இயக்கத்தினர், பல்துறைகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவியர் சென்னை எலியட் கடற்கரையில் திரண்டனர்.
“நாட்டை – வீட்டை அழிக்கும் மது, போதையை மறுப்போம், இந்த மண்ணிலிருந்து இத்தீங்கை அகற்றப் போராடுவோம்” என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு முன்பு, கடற்கரையில் திரண்டிருந்த இளைஞர்கள் – மாணவர்கள் மத்தியில் மது, போதை மறுப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி. மகேந்திரன்
பேசியதாவது:
“மது, போதைப் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அழிந்து விட்டன. அந்த வலியும் வேதனையும் தான் நம்மை இங்கு அணிதிரள வைத்துள்ளது.
இந்தத் தலைமுறை சுடுகாட்டுக்குப் போய்விட்டது. அடுத்த தலைமுறையையாவது காப்பாற்றியாக வேண்டும்” என்று பேசினார்.