அருமை நிழல்:
சீர்காழி கோவிந்தராஜன் இளமையிலேயே தேவி நாடகக் குழுவிலும், பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்டார்.
கோவிந்தராஜனை அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன் தியேட்டர்ஸில் துணை நடிகராகச் சேர்த்துவிட்டார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் அரங்கின் தனி அறை ஒன்றில் தங்கியபடியே சங்கீத சாதகம் செய்வதை வழக்கமாகக் கொண்டார்.
கோவிந்தராஜன் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும், இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் கோவிந்தராஜனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அப்போதே கணித்துச் சொன்னார்கள்.
பி.ஏஸ்.செட்டியார், கோவிந்தராஜனைச் சென்னைக்கு அழைத்து வந்து தமிழ் இசைக்கல்லூரியில் சேர்த்துவிட்டார். பதினெட்டு வயதிலேயே (1951) சங்கீத வித்வான், இசைமணி ஆகிய பட்டங்களைப் பெற்றார்.
1951-ல் சென்னை வித்வத் சபையில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் பிறகே சினிமா வாய்ப்பு கோவிந்தராஜன் கதவைத் தட்டியது..
கல்கி எழுதிய பொய்மான் காடு பொன்வயல் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. துறையூர் ராஜகோபால் சர்மா இசையில் சுத்தானந்த பாரதி வரிகளில் தனது வெங்கலக் குரலை சிரிப்புத் தான் வருதைய்யா என்ற பாடல் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் கோவிந்தராஜன்.
ஆனால், இந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த அவ்வையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.
ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கு சீர்காழியும், சிவாஜிக்கு டி.எம்.எஸ்ஸும் பாடி வந்தார்கள்.
1957-ம் ஆண்டில் வெளியான ‘ராஜராஜன்’ திரைப்படத்திற்காக “இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே……..” என்ற பாடல்தான் சீர்காழி கோவிந்தராஜன் எம்.ஜி.ஆருக்காக பாடிய முதல் பாடல்.
அதன்பிறகு சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப்பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கான பாடல்களை சீர்காழி பாடியிருந்தார்.
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்கள்:
• நிலவோடு வான்முகில், இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)
• எல்லை இல்லாத இன்பத்திலே – (சக்கரவர்த்தி திருமகள்)
• உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா – (நாடோடி மன்னன் 1958)
• வண்டு ஆடாத சோலையில் ,ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)
• சிரிப்பது சிலபேர், யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை 1961)
• ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்) ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்
• ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)
#சீர்காழிகோவிந்தராஜன் #சக்ரவர்த்தித்திருமகள் #புதுமைப்பித்தன் #ராஜராஜன் #எம்ஜிஆர் #நல்லவன்வாழ்வான் #சிவாஜி #டிஎம்எஸ் #seerkazhigovindarajan #chakravarthithirumagal #puthumaipithan #rajarajan #mgr #tms #sivaji #nallavanvaazhvaan