‘உணவு’க்குப் பின்னுள்ள உழைப்பு எப்படிப்பட்டது?

நூல் அறிமுகம்:

இது கடலோர சமூக மக்களின் சமையல் கலை நூல். இந்தியாவின் கோரமண்டல் கடற்கரையில் உள்ள கடலோர மீனவச் சமூகத்தின் உணவு வகைகளையும், அவற்றைச் சமைப்பதற்கான முறைகளையும் விவரிக்கிறது.

சமையல் குறிப்புகளோடு கடலோர உணவின் சுவைக்குக் காரணமாய் உள்ள சூழல், உழைப்பு முதலியவை பற்றி விரிவாகப் பேசுகிறது. 

எண்ணூர்-பழவேற்காடு கடலோர சதுப்பு நிலப் பகுதிகளில் பின்பற்றப்படும் உணவுகளில் இருந்து தொடங்குகிறது. இங்குச் செழித்து வளரும்  இறால், நண்டு போலவே சமைக்கப்படும் உணவின் சுவையும் செழிப்பாக உள்ளது.

இப்பகுதிகளைத் தொடர்ந்து காசிமேடு துறைமுகப் பகுயில் பின்பற்றப்படும் உணவுகளையும், சமூக ஊகடங்களில் புகழ்பெற்றுள்ள பட்டினப்பாக்கம் உணவகங்கள் வழியாகப் பயணித்துப் புதுச்சேரியின் சமையல் முறைகள் பற்றியும் விவரிக்கிறது. 

நாம் சாப்பிடும் தட்டில் உள்ள மீன் எங்கிருந்து வந்தது. அவை நம் சமையல் அறைக்குள் வந்து சேர்ந்ததில் அடங்கியுள்ள உழைப்பைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது மிக அவசியம்.

சோழ மண்டலக் கடற்கரையின் பிரதான உணவுப் பண்பாட்டினை ஆவணப்படுத்தும் முயற்சியின் தொடக்கம் இந்நூல்.

*******

நூல்: நெய்தல் கைமணம் 
தொகுப்பாசிரியர்கள்: அ.பகத்சிங், நிரஞ்சனா
பக்கங்கள்: 316
உயிர் பதிப்பகம்

விலை: ரூ.500/-
You might also like