மீண்டும் ஒரு படம் எடுத்துக் கொள்வோம்!

எழுத்தாளர் வண்ணதாசன்

இந்தப்படம் கிடைக்கும் என நினைக்கவே இல்லை. இன்றைய நினைவுகளில் ஒன்றாக வந்தது. சிலதினங்களுக்கு முன் ஓவியர் வள்ளியும் நானும் இந்தப் படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். முக்கியமாக இந்த மிக உயரமான கதவு இந்தப் படத்திற்கு அளித்திருக்கும் உயிர்ப்பு பற்றி.

அப்பாவை இப்படி மச்சுக்குச் செல்லும் முதல் கல்படியில் உட்காரச் சொல்லியும், என்னை இப்படிக் காரை பெயர்ந்த சுவரோடு சாய்ந்து நிற்கவைத்தும் எடுத்த புகைப்படக்காரர் யார் என்று தெரியவில்லை.

ஒன்று அய்யனாரோடு வந்த மேலூர் பிரபா ஸ்டுடியோ சர்புதீன் ஆக இருக்கும். அல்லது நம்பிராஜனோடு வந்த சந்தோஷ் நம்பிராஜனின் அறை நண்பராக இருக்க வேண்டும்.

எனக்கும் அப்பாவுக்கும் இடையில் அந்த எட்டடி உயரக் கதவு இல்லாமல் இந்தப் படம் ஒருபோதும் இவ்வளவு அழகாக அமைந்திருக்காது.

இப்படியே புறப்பட்டுப்போய் அந்த மரக்கதவைப் பார்க்கவேண்டும்போல இருக்கிறது வள்ளி. முடிந்தால் நீங்களும் வாருங்களேன். மீண்டும் ஒரு படம் எடுத்துக்கொள்வோம்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like