டக்ளஸின் புதிர் பிராந்தியப் படைப்புலகம்!

– சி. மோகன்

இது, சி. டக்ளஸ் 1991-ல் வரைந்த உருவ ஓவியம். இதிலிருந்து விரிந்து செழித்ததுதான், இன்று நம்மால் அறியப்படும் டக்ளஸின் புதிர்ப் பிராந்தியப் படைப்புலகம்.

நவீன மனிதன் பற்றியும் வாழ்க்கை பற்றியுமான கேள்விகளோடும் புரிதல்களோடும் உருவான படைப்புலகின் தொடக்கம் இந்த ஓவியம்.

தொடக்க காலத்தில் சகஜமான உருவ ஓவியப் படைப்புகளில் ஈடுபட்டிருந்த டக்ளஸ், பின்னர் புதிய பரிசோதனைகளில் ஈடுபட விழைந்தார்.

ஜெர்மனி சென்றார். வலிகள் மிகுந்த ஒன்பது ஆண்டு கால ஜெர்மனி வாழ்க்கையில் அவர் படைத்தவை உணர்வுகளின் உந்துதலற்ற புதிய, அரூப ரீதியிலான பரிசோதனை முயற்சிகள்.

ஒன்பதாண்டு ஜெர்மனி வாசத்திற்குப் பின், உள்மன உந்துதலில் சென்னை திரும்பினார்.

கருத்துலகின் அடர்த்தியோடும் புதிர்த்தன்மையின் வசீகரத்தோடும் பிரத்தியேகமான அழகியல் நுட்பங்களோடும் உருவ ஓவியங்களை மன எழுச்சியோடு படைக்கத் தொடங்கினார். அதன் தொடக்கமாக அமைந்ததுதான் இந்த ஓவியம்.

நன்றி: பேஸ்புக் பதிவு

#சி_டக்ளஸ் #சி_மோகன் #c_douglas #c_mohan #artist_c_douglas

You might also like