ரஜினிக்காக உருவான ’அம்மன் கோவில் கிழக்காலே’!

ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட்டான திரைப்படங்களில் முக்கியமானது ராஜாதி ராஜா. ரஜினி இரண்டு வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம் 1989 மார்ச் மாதத்தில் வெளியானது.

ராஜாதி ராஜா பலவகைகளில் ரஜினிக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் முக்கியமான திரைப்படம்.

அம்மன் கோவில் கிழக்காலே படத்தை ஆர்.சுந்தர்ராஜன் ரஜினியை வைத்துதான் இயக்க நினைத்தார். அவர் அதுவரை ரஜினி படத்தை இயக்கியதில்லை. ஆனால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை.

விஜயகாந்தை வைத்து ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தை எடுத்தார். மூன்றே வருடங்களில் அவர் விரும்பியபடி ராஜாதி ராஜாவில் ரஜினியை இயக்கினார்.

எம்.ஜி.ஆர். “புதிய வானம் புதிய பூமி எங்கும் பூ மழை பொழிகிறது” என்று பாடியது போல ஒரு பாடலை இந்தப் படத்தில் வைக்க விரும்பி, வாலி எழுத்தில் உருவானதுதான்  “மலையாள கரையோரம் கவி பாடும் குருவி”.

மனோ இந்தப் பாடலை பாடியிருந்தார். ரசிகர்களை பாடல் கவர்ந்த அளவுக்கு இந்தப் பாடல் காட்சியில் ரஜினி அணிந்திருந்த வெள்ளை சட்டையும், பேகி பேண்டும் அன்றைய இளைஞர்களின் ஸ்டைலாக மாறிப்போனது.

ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்த கச்சிதமான வணிக சினிமாவாக ராஜாதி ராஜா இருந்ததால்தான் இன்றும் அது ரசிக்கக்கூடியதாக இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் நடித்த ராஜாதி ராஜா திரைப்படத்தின் படப்பிடிப்பில், காட்சியை விளக்கும் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்.

You might also like