கமல் வெளியிட்ட தேவிஸ்ரீ பிரசாத்தின் ‘ஓ பெண்ணே’ பாடல்!

தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் “ஓ பெண்ணே” பாடல் வெளியீட்டு விழா.

பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாடலின் தமிழ்ப் பதிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். ஹிந்தி பதிப்பை ரன்வீர் சிங் முன்னரே வெளியிட்டிருந்தார். தெலுங்கு பதிப்பு நாகார்ஜூனாவால் வெளியிடப்படுகிறது.

வெளியீட்டு விழாவில் பேசிய தேவிஶ்ரீபிரசாத், “கமல் சாருக்கு எனது அன்புகளும் நன்றிகளும். நான் எந்த பணியை மேற்கொண்டாலும் அவர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.

இந்த சர்வதேச பாடலின் ஐடியாவை முதன்முதலில் அவரிடம்தான் கூறினேன். அவரது உத்வேகம்தான் இந்த பாடலை முடிக்க காரணமாக இருந்தது.

சுயாதீன கலைஞர்கள் வெளியே வரவேண்டும் என்பதற்காக தான் கொரோனா காலத்தில் ராக்ஸ்டார் என்ற நிகழ்வை நடத்தினேன்.

இந்த பாடலின் நோக்கமே சுயாதீன கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் தங்கள் திறமையை காட்ட வேண்டும் என்பதுதான்.

பல மொழிகளை கற்றுக்கொண்டு, பல மொழிகளில் இசையமைக்க வேண்டும். இந்த பான் இந்தியன் பாப் ஆல்பத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார்.

நடிகர் கமல்ஹாசன் பேசுபோது, “தேவிஶ்ரீபிரசாத்தை எனக்கு பல நாட்களாக தெரியும். இவர் என்னை அதிகமாக வியக்கவைத்துக் கொண்டே இருக்கிறார். பல சாதனைகள் படைத்து அடுத்து அடுத்து என உத்வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறார்.

அது சிறந்த இசை கலைஞர்களுக்கே உண்டான சிறப்பம்சம்.

திரை இசைப் பாடல்களைத் தாண்டி, சுயாதீன பாடல்கள் நிறைய வர வேண்டும், இசை கலைஞர்கள் அதை செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.

திரைப்படங்களைவிட மிகபெரிய துறையாக இசைத் துறை வளர வேண்டும், அதற்கு உண்டான தகுதி அதில் இருக்கிறது.

அதற்கு உங்கள் அனைவரது ஆதரவும் தேவை.
பழைய காலத்தில் இது அதிகமாக இருந்தது.

இப்போதும் மீண்டும் அது வரவேண்டும். தேவிஶ்ரீபிரசாத்தின் இந்த பாடல் பெரும் வெற்றிபெற வேண்டும். தமிழ் சினிமாவிலும் இவர் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யவேண்டும்” என்று பாராட்டினார்.

You might also like