தமிழகத்தில் புதிதாக 2743 பேருக்கு கொரோனா தொற்று!

– மாநில சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் தீவிரமாக பின்பற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், “தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 2,743-ஆக பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16,765 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 1,791 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 35 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1062 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 403 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 27 ஆக அதிகரித்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

You might also like