சாதிப் பாகுபாட்டை ஒழிக்கும் விளையாட்டு!

– நடிகர் விஜய் சேதுபதி

71-வது சீனியர் தேசிய கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கின.

ஏப்ரல் 10 வரை நடைபெறும் போட்டிகளில், ஆண்கள் பிரிவில் 16 மாநிலங்களைச் சேர்ந்த அணிகளும், பெண்கள் பிரிவில் 15 மாநிலங்களைச் சேர்ந்த அணிகளும் பங்கேற்றிருக்கின்றன.

இதன் தொடக்க விழாவில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன், “விளையாட்டுப் பிரிவில் மாணவர்களுக்கு அரசு வேளையில் 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணை விரைவில் திருத்தப்படும்.

விளையாட்டு பொருளாதாரத்தை உருவாக்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அதன்பின் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “விளையாட்டு, சமூகத்தில் உள்ள சாதி என்னும் பாகுபாட்டை உடைக்கிறது. விளையாட்டு மட்டும் தான் மனிதனின் உடலை கட்டுப்படுத்துகிறது.

விளையாட்டை வெறும் விளையாட்டாக பார்க்காமல், அதற்குள் இருக்கும் நுணுக்கங்களை வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

You might also like