கொரோனா தொற்று எல்லா வயதினர் மத்தியிலும் மனநல பிரச்சனைகளை அதிகரித்துள்ளது.
அதனால் கொரோனா காலத்தில் மனநல ஆலோசனை வழங்குவது அவசியம் ஆகிறது. இதற்காக தேசிய அளவில் தொலைபேசி வழி மனநல ஆலோசனைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பெங்களுரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் மருத்துவ நிறுவனமும், சர்வதேச தகவல் தொழிநுட்ப நிறுவனமும் இந்தத் திட்டத்துக்கு தேவையான உதவியை அளிக்க உள்ளது.
இந்தத் திட்டத்தில் அனைவருக்கும் 24 மணிநேரமும் இலவச மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இந்தத் தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது தெரிவித்தார்.
02.02.2022 4 : 30 P.M