தமிழகக் காவல்துறையினருக்கு ஒன்றிய அரசு விருது!

ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழகக் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 203 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘அதி உத்கிரிஸ்த் சேவா’ பதக்கம் சென்னை விஜிலென்ஸ் கூடுதல் மாவட்டக் கண்காணிப்பாளர் பிருத்விராஜன், காவல் ஆய்வாளர்கள் கோபால், ராஜகேசர், உதவி ஆய்வாளர்கள் யுவராஜ், ஆர்.சீனிவாசன், பி.சீனிவாசன், தயாளன், தேவேந்திரன்; சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சித்ரா, ரவி, ராமமூர்த்தி, விஜயகுமார், குணசேகரன், மாசிலாமணி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

‘உத்கிரிஸ்த் சேவா’ பதக்கம் சென்னை ஏஐஜி சரவணன், மாவட்டக் கண்காணிப்பாளர் சாமிநாதன், கூடுதல் மாவட்டக் கண்காணிப்பாளர் ஜான்லியோ; காவல் ஆய்வாளர்கள் வேலவன், சங்கு, ராஜீவ் பிரின்சி ஆரோன், அமல் ஸ்டான்லி ஆனந்த், மாதேஸ்வரன், பண்டாரசுவாமி, ஹேமலதா, பன்னீர்செல்வம், சந்துரு, ஜானகிராமன் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

16.12.2021  4 : 30 P.M

vels
You might also like