ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர்!

– சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது.

தற்போது, கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், தலைமைச் செயலகத்தில் உள்ள வளாகத்தில் ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற இடத்திலேயே கூட்டத் தொடர் நடைபெறும். காகிதம் இல்லாத தொடுதிரை வசதி பயன்படுத்தப்படும்” எனக் கூறினார்.

vels
You might also like