ரஜினியுடன் சசிகலா சந்திப்பு!

திருமதி வி.கே.சசிகலா, நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இது குறித்து திருமதி வி.கே.சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இதோ:

புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்கு இன்று (07.12.2021) நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, அவருடைய மனைவி திருமதி.லதா ரஜினிகாந்த் அவர்களும் உடன் இருந்தார்கள்.

திரு. ரஜினிகாந்த் அவர்கள் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, தற்பொழுது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்து, நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய உடல் நலனைப் பற்றியும் கேட்டு அறிந்தார்.

மேலும், திரு. ரஜினிகாந்த் அவர்கள் கலையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும், தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும், புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.

07.12.2021  4 : 20 P.M

vels
You might also like