தமிழ் சினிமாவில் முதலில் என்னை பி.ஆர்.ஓ. ஆக்கியவர் எம்.ஜி.ஆர்!
1958 ல் ‘நாடோடி மன்னன்’ படத்திற்கு நான் மக்கள் தொடர்பாளராக ஆனேன். அதற்கு முன்பு பி.ஆர்.ஓ. என்ற ஒன்றில்லை. நான் தான் முதல் நபர்.
அப்படி வந்தது ஓர் சுவாரசியமான கதை.
நடிகர் சங்கம் ‘நடிகன் குரல்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தது.…