Browsing Category
இந்தியா
சாமானியர்களின் குரலையும் காது கொடுத்துக் கேட்கிறோம்!
உச்சநீதிமன்றம் உருக்கம்:
உச்சநீதிமன்ற நீதிபதி மேத்யூஸ் நெடும்பாரா அண்மையில் உச்சநீதிமன்ற தலைமைச் செயலருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், "உச்சநீதிமன்றம், அரசியல் சாசன அமர்வு விசாரணைகளுக்காக நேரத்தை விரயம் செய்கிறது. அதற்கு பதிலாக…
உறக்க நிலையிலிருந்து எழாத விக்ரம் லேண்டர், பிரக்யா ரோவர்!
-இஸ்ரோ தகவல்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ம் தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
இது புவிவட்டப்பாதை, நிலவு…
மகளிர் மசோதா நிறைவேற 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!
மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
இந்த மசோதா நீண்ட, நெடிய வரலாற்றைக் கொண்டது.…
சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆதித்யா எல்-1
- இஸ்ரோ தகவல்
ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் எல்-1 புள்ளிக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1…
மகளிருக்கு 33 % இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா…
நடப்பாண்டில் நிகர நேரடி வரி வருவாய் 7 லட்சம் கோடி!
- ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல்
நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் பாதி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிகர நேரடி வரி வருவாய் 23.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒன்றியஅரசு நேரடி மற்றும் மறைமுக வரி என்னும் 2…
மணிப்பூரில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 175!
மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,108 பேர் காயமடைந்துள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ம் தேதி மெய்தி இன மக்களுக்கும், குகி இன மக்களுக்கும்…
சனாதனம்: வன்முறைப் பேச்சும் சாபமும்!
சென்னை தேனாம்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியபோது, “சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்” என்று…
உலகத் தலைவர்கள் விரும்பி சாப்பிட்ட இட்லி, சாம்பார்!
டெல்லியில் இரண்டு நாட்கள் நடந்து முடிந்துள்ள ‘ஜி-20’ உச்சி மாநாட்டு முடிவுகளை ஊடகங்கள், திகட்ட திகட்ட ஒளிபரப்பி ஓய்ந்து விட்டன.
மாநாட்டுக்கு வந்த அமெரிக்க அதிபர் ஊர்தியும், உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தும் அதிகமாக…
மோடிக்கு அதிர்ச்சி அளித்த இடைத்தேர்தல் முடிவுகள்!
6 மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதிகாரப்பூர்வ முடிவுகள் இரவில் அறிவிக்கப்பட்டன.
மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என கருதப்பட்ட இந்த தேர்தலில்…