Browsing Category
கதம்பம்
விமர்சிப்பவர்களை வீழ்த்தும் ஆயுதம்!
இன்றைய நச்:
உன் கருப்பு நிறத்தை
ஒரு போர்வை போல் போர்த்தாமல்
ஒரு போர்க்கொடி போல்
உயர்த்திப் பிடி!
- ஆப்பிரிக்கக் கவிதை
உலகின் மிகச் சவாலான விஷயம்!
உலகத்தில் மிக சவாலானது நம்மைப் பற்றிய பிறரது கற்பனைகளோடு நாம் போராடுவதுதான்! - மனுஷ்யபுத்திரனுடைய வரிகளின் தொகுப்பிலிருந்து.
தவறுகளிலிருந்து கற்றுக் கொள்வோம்!
தாய் சிலேட்:
வெற்றிகரமான மனிதன்
தனது தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு,
மீண்டும் வேறு ஒரு வழியில்
முயற்சி செய்வான்!
- டேல் கார்னகி
மகிழ்ச்சிக்குள் கரைந்துபோகும் துயரங்கள்!
துண்டை உதறும்போது தூசுகள் பறந்து போவதுபோல, வாய்விட்டுச் சிரிக்கும்போது நம்மிடமுள்ள துன்பங்கள் எல்லாம் பறந்து போகும். - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
பாரதிதாசனும் ‘பாண்டியன் பரிசு’ திரைப்படமும்!
மாடர்ன் தியேட்டர்ஸில் வெளிவந்த 'வளையாபதி' போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிற பாரதிதாசன், தான் எழுதிய 'பாண்டியன் பரிசு' காவியத்தைத் திரைப்படமாக்க நினைத்தார்.
எதையும் கடந்து செல்லப் பழகுவோம்!
படித்ததில் ரசித்தது:
தற்கால வாழ்வில் எந்த நிகழ்விற்கும் துவக்கம் எதுவென்றோ, முடிவு எது என்றோ அறிய முடியாது. நிகழ்வின் இடையில் நாம் அதை எதிர்கொள்கிறோம். வெற்றி கொள்கிறோம் அல்லது வீழ்த்தப்படுகிறோம் அல்லது கடந்து போகிறோம்!
- எஸ்.ராமகிருஷ்ணன்
எது மிகச்சிறந்த வெற்றி?
தாய் சிலேட்:
போரே இல்லாமல்
கிடைக்கும் வெற்றிதான்
மிகச்சிறந்த வெற்றி!
- சுன் சூ
மௌனமே சிறந்தது!
ஒரு வார்த்தை கூட பேசாமல் அன்பை வெளிப்படுத்தலாம், சண்டையிட தான் வார்த்தைகள் தேவை, முடிந்தவரை குறைவாக பேசுங்கள், மௌனமே சிறந்தது!. - ஓஷோ.
எழுத்தாளனும் வேலைநிறுத்தம் செய்யலாம்!
எழுத்தைத் தொழிலாகக் கொண்டுள்ளவன் என்கிற முறையில், நான் தற்போதைக்கு வேலை நிறுத்தம் செய்திருக்கிறேன். - எழுத்தாளர் ஜெயகாந்தன்.
உறவுகள் எப்போதும் நிலைத்திருக்க…!
படித்ததில் ரசித்தது:
மனிதர்களிடம்
முகம் பார்த்து பழகுவதைவிட
மனம் பார்த்து பழகும் உறவு
எப்போதும் நிலைத்திருக்கும்!
- இயக்குநர் ராம்