Browsing Category
மணாவின் பக்கங்கள்
குன்றக்குடி அடிகளார் – பொதுநலம் பேணிய தனிப்பெரும் துறவி!
“துறவியாகி விடலாம் போலிருக்கிறது”. - இப்படி ஆன்மீகத்தில் தீவிரமான நம்பிக்கை உள்ளவர் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஒரு கட்டத்தில் தன்னுடைய பிறந்தநாள் மலரில் இப்படிச் சொன்னவர் தந்தை பெரியார்.
உடனே வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த…
ஒரு பாட்டில்தான் எத்தனை பிணைப்புகள்!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
தமிழத் திரையுலகில் திறமையுள்ளவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் உரிய அங்கீகாரமோ, புகழோ சுலபத்தில் கிடைத்துவிடுவதில்லை. அதற்காக அவர்களும் தளர்ந்துவிடுவதில்லை.
திரும்பத்திரும்ப தன்முனைப்புடன்…
சில்லென்ற அன்பும் நெகிழ்வும்…!
பரண்:
டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் திரையுலகில் உயர்த்திய 'மாலையிட்ட மங்கை'' படத்தைத் தயாரித்தவர் கவிஞர் கண்ணதாசன்.
அவருடைய இசைக்கச்சேரி ஒன்றில் கண்ணதாசன் பேசும்போது மனநிறைவோடு சற்றுத்தலைகுனிந்த படி டி.ஆர். மகாலிங்கம் இருக்கும்…
கலைஞரைக் கடைசியாக சந்தித்த தருணம்!
கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைவிழந்த நிலையில் இருந்தபோது செல்வியும் தமிழும் என்னை கலைஞரிடம் அழைத்துச் சென்று, ”சிவக்குமார் வந்திருக்கிறார்” என்று கூறினார்.
அவரது முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
அப்போது நான், தமிழருவி மணியன் எழுதிய…
போதைப்பொருள் புழக்கத்திற்கு இப்படியும் ஒரு ‘சாம்பிள்’!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
கடந்த ஓராண்டிற்கு மேலாக சூழ்நிலைக் கருதிப் போக்குவரத்துக்குக் கால் டாக்ஸிகளை அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பல தரப்பட்ட கால் டாக்ஸி டிரைவர்களுடன் தொடர்ந்து உரையாடும் சந்தர்ப்பங்களும் வாய்த்திருக்கின்றன.…
இந்தியாவில் குருட்டு நம்பிக்கைகள் அதிகம்!
பரண்:
பிரமிள் என்றழைக்கப்பட்ட தமிழின் முக்கியமான கவிஞரும், விமர்சகருமான தருமு சிவராமுவிடம் 1979-ல் எடுக்கப்பட்ட நேர்காணலில் இருந்து ஒரு பகுதி.
கேள்வி:
மேல் நாட்டில் ஆழ்ந்த நுண்மையான விஷயங்கள் எல்லாம் தகுந்த ஆதரவுடன் கவனிப்புக்கு…
இப்படியும் ஒரு ‘குரு’ பக்தி!
மகா வித்வான் மீனாட்சி சுந்தரனார் அவர்களைப் பற்றி வரலாற்று நூலின் முன்னுரையில் உ.வே.சாமி நாதன் அவர்களை இப்படி எழுதி இருக்கிறார்.
என் ஆசிரியரின் முழுப் பெயரையும் இவ்வளவு நாள் கழித்தும் குறிப்பிட்டு எழுத என் பேனா கூசுகிறது.
நினைவுகளின் உயிர்ப்பில் கி.ரா…!
“அய்யா.. நீங்க எப்போ இருந்து எழுத ஆரம்பிச்சீங்கய்யா?”
“ தம்பீ.. என்ன கேட்டீங்க?”
அதே கேள்வியை மறுபடியும் அதே தொனியில் கேட்டிருக்கிறார் கி.ரா.வுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த இளம் பத்திரிகையாளர்.
பதிலுக்கு பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்க…
மதுவிலக்கு: வாக்கு வங்கியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது!
சர்க்கார் எவ்வளவு தான் சட்டம் போட்டாலும், கள் குடிப்பவன் குடித்துக் கொண்டுதான் இருப்பான்; இறக்குபவன் இறக்கிக் கொண்டுதான் இருப்பான்.
இந்த மதுவிலக்கு - காரியத்துக்குப் பயன்படாது; ஓட்டுக்குத்தான் பயன்படும்.
குழந்தைமைக் குரலில் வாழ்ந்த எம்.எஸ்.ராஜேஸ்வரி!
தமிழ் சினிமாவிற்கு எம்.எஸ்.ராஜேஸ்வரியை அறிமுகம் செய்தவர் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான பி.ஆர்.பந்துலு. மதுரை சடகோபன் ராஜேஸ்வரி என்பதுதான் எம்.எஸ்.ராஜேஸ்வரி.