Browsing Category
சினிமா
2கே லவ் ஸ்டோரி – நட்பா, காதலா எனும் ஊசலாட்டம்!
நட்போடு பழகும் ஒரு ஆண், பெண் பற்றி எத்தனையோ தமிழ் திரைப்படங்கள் பேசியிருக்கின்றன. அவற்றின் சாயல் ‘2கே லவ் ஸ்டோரி’யில் நிறையவே உள்ளது.
அந்த நினைப்பையும் மீறிச் சில காட்சிகள் இதில் ஈர்க்கின்றன.
காதல் என்பது பொதுவுடைமை – தன்பாலின காதலுக்கு அனுமதி!
’காதல்னா என்னன்னு தெரியுமா’ என்று ‘பாடம்’ எடுக்கும் படங்கள் பலவற்றை நாம் கண்டிருப்போம். தமிழ் சினிமாவில் அப்படிப்பட்ட படங்களுக்கென்று தனி வகைமையே பிரிக்கலாம். அவற்றில் இரண்டு படங்கள் விஜய்யின் திரை வாழ்க்கையில் ஒளி கூட்டின. ‘பூவே உனக்காக’,…
கவுண்டமணியை எனக்குப் பிடிக்கக் காரணம்!
கவுண்டமணி எனக்குப் பிடித்த நடிகராக இருப்பதற்குப் பல காரணங்கள். முதன்மைக் காரணம் எழுதித் தராத வசனங்களை அவராகச் சட்டென்று பேசுவார். அதில், அரிதான வட்டார வழக்குச் சொற்கள் வந்துவிழும். கெட்ட வார்த்தைகளைக்கூட சாதாரணமாகப் பேசிக் கடந்துவிடுவார்.
பெண் சார்ந்த ஒழுக்கவியல் இங்கு வலுவாக இருக்கிறது!
தமிழ் இலக்கிய உலகின் ஆகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் மறைந்த எழுத்தாளர் அஸ்வகோஷ் என்ற இராசேந்திர சோழன்.
தோற்றத்தில் மட்டுமல்லாமல், கதையோ, கட்டுரையோ, நாவலோ, எழுத்திலும் மொழி நடையிலும் கம்பீரத்தைக் கைக்கொண்டிருந்தவர். பேச்சும் உரையும்கூட…
‘ப்ரோமான்ஸ்’ – பாத்திரங்களின் வழியே நகரும் கதை!
விதவிதமான பாத்திரங்களை வடிவமைத்த கையோடு, அதற்குப் பொருத்தமான நடிகர் நடிகைகளையும் தேர்ந்தெடுத்த வகையில் அசத்துகிறது ‘ப்ரோமான்ஸ்’ திரைப்படம்.
ஒத்த ஓட்டு முத்தையா – உங்களுக்கு ‘கவுண்டமணி காமெடி’ பிடிக்குமா?
’உங்களுக்கு கவுண்டமணி காமெடி பிடிக்குமா?’, இந்தக் கேள்வியைக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள். அவர் நடித்த காட்சிகள் சிலவற்றைக் கண்டிருந்தாலே போதும்; இதற்கான பதிலைச் சட்டென்று சொல்லிவிடுவீர்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்…
செம்புலப் பெயல்நீர்: என்றும் இனிக்கும் குறுந்தொகைக் காதல்!
“யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர்போல
அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே”
(செம்புலப்பெயல்நீரார், குறுந்தொகை - 40)
- எட்டுத் தொகை இலக்கியங்களில்…
நாரயணீண்ட மூணான்மக்கள் – எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
சூரஜ் வெஞ்சாரமூடு, ஜோஜு ஜார்ஜ், அலென்சியர் லே லோபஸ் மூவருமே சமகால மலையாள சினிமாவின் முக்கிய ஆளுமைகள். இவர்கள் மூவருமே ஒரு படத்தில் இருக்கின்றனர் என்பது உடனடியாக ரசிகர்களை ஈர்க்கும் விஷயமாக அமையும். அதனை மெய்ப்பித்துக் காட்டியது ‘நாராயணீண்ட…
விடாமுயற்சி – அஜித் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமா, திண்டாட்டமா?!
கொஞ்சம் முதிர்ந்த, அழகான பெண் ஒருவரின் காதலைத் திரையில் உணரச் செய்திருக்கிறது த்ரிஷாவின் நடிப்பு. இப்படத்தின் ப்ளஸ், ரெஜினாவின் இருப்பு.
ஒரு ஜாதி ஜாதகம் – ஒரு ‘கல்யாண’ கலாட்டா!
சில திரைப்படங்களின் ட்ரெய்லர் பார்த்தாலோ, அது தொடர்பான தகவல்களை அல்லது வெளியீட்டு அறிவிப்புகளைக் கண்டாலோ, ‘உடனடியாக இதனைப் பார்த்தாக வேண்டும்’ என்று தோன்றும். கனமான உள்ளடக்கம் அதிலிருக்க வேண்டும் என்பதில்லை. ‘எண்டர்டெயின்மெண்டுக்கு…