Browsing Category
கதம்பம்
ஆழ்ந்த சிந்தனை அமைதி தரும்!
இன்றைய நச்:
எது செய்தாலும்
யோசித்த பிறகே செய்;
ஆழ்ந்து யோசிப்பதற்கு
எப்போதும் அமைதியோடு இரு;
அந்த அமைதி வேண்டுமெனில்
பரபரப்பு இல்லாமல்
இருக்கக் கற்றுக் கொள்!
- எழுத்துச் சித்தர் பாலகுமாரன்
உண்மையை மட்டும் பேசுங்கள்!
தாய் சிலேட்:
உண்மையை மட்டும்
பேசுங்கள்;
அது,
உங்கள் மீதுள்ள
மரியாதையைப்
பாதுகாக்கும்!
- வள்ளலார்
பெண்களை முகமூடி அணிய நிர்பந்திக்கும் பொதுச் சமூகம்!
இந்தச் சமூகத்தின் அணுகுமுறைகளால் பெண் தன் உண்மை முகத்தை வெளிக்காட்டிக்க முடியாமல் முகமூடி அணிந்துதான் வாழ வேண்டியிருக்கு.
தன்னைப் புரிந்து கொள்ளாமல் உலகை மாற்ற முடியாது!
நீங்களும் நானும், ஒரு முழுமையான, ஒன்றிணைந்த செயல்முறையாக நம்மைப் புரிந்து கொள்ளாதவரை, ஒரு முழுமையானப் புரட்சி, செழுமையானப் புரட்சி நடைபெறாது.
இயற்கையின் பேராற்றலை உணர்ந்து செயலாற்றுவோம்!
இன்றைய நச்:
இயற்கையின் புலன்களுக்கு
அப்பாற்பட்ட ஆற்றலை
அறியவும் மதிக்கவும்
தெரிந்திருந்தால் தான்,
ஒரு மனிதன்
மற்ற மனிதர்களிடமும்
பொருட்களிடமும்
சரியாக தொடர்பு கொண்டு
வாழ முடியும்!
- வேதாத்திரி மகரிஷி…
வாழ்வைப் பயனுள்ளதாக வாழ்வோம்!
தாய் சிலேட்:
எதையும் நிரூபிப்பதற்காக
நாம் இங்கில்லை;
நலமாக, மகிழ்ச்சியாக,
பயனுள்ளவர்களாக
வாழ்வதற்கே
இருக்கிறோம்!
- ஜெயமோகன்
#ஜெயமோகன் #writer_jayamohan
நிலையாமையை உணராத மனிதன்!
இன்றைய நச்:
மரணம் நிச்சயம்
என்று தெரிந்தும்
மனிதன்
ஆசையாலும்
ஆணவத்தாலும்
அலைமோதுகிறான்!
- கவியரசர் கண்ணதாசன்
அறிவும் ஆரோக்கியமும் பெருஞ்செல்வம்!
தாய் சிலேட்:
உடல் நலமும்
அறிவின் உயர்வுமே
பெருஞ்செல்வம்;
கடமையின் சிறப்பே
களங்கமில்லா வாழ்வு!
- வேதாத்திரி மகரிஷி
யாருக்கும் அடிமையாக இருக்காதே!
எதிரியாகக் கூட வாழ்ந்துவிடு; ஆனால், ஒருவருக்கும் அடிமையாக வாழாதே!- சேகுவேராவின் சிந்தனை வரிகளின் தொகுப்பிலிருந்து.
மிருகத்தை மனிதன் ஆக்கும் வாசிப்பு!
உலகத்தில் இரண்டு வகை காகிதங்கள் உள்ளன; ஒன்று மனிதனை மிருகமாக்கும் பணம்; மற்றொன்று மிருகத்தை மனிதனாக்கும் புத்தகம்!