Browsing Category
கவிதைகள்
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?
விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்ல
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும்…
உண்மையைத் தேடாதீர்கள்; அது உங்களிடமே இருக்கிறது!
"அனாதையை ஆதரிப்பார் யாரு மில்லையா?” என்று பித்தன் கடைத் தெருவில் திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிந்தான்.
"யார் அந்த அனாதை?" என்று கேட்டேன்.
"உண்மை" என்றான்.
"கடைத் தெருவில் அது அனாதையாக
அழுது கொண்டிருந்தது. அதை யாருமே
அடையாளம் கண்டு…
கவிக்கோ நினைவு ஹைக்கூ போட்டி!
- நன்றி கூறும் தமிழ் உலகம்
'கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி' -2023 (இரண்டாம் ஆண்டு) பரிசளிப்பு விழா சென்னை, தியாகராயர், பிட்டி தியாகராயர் அரங்கில் மிகச் சிறப்பாக நடந்தது.
இதுபற்றிய சுவையான பதிவை அவ்விழாவில் பங்கேற்ற கவிஞர்…
பார்த்திபன் கவிதை ‘படித்தேன்’!
நடிகர் பாத்திபன் நெகிழ்ச்சி:
ஒருநாள்
நான் ஒரு ஃபோட்டோவைப் பார்த்தேன்.
அடுத்தநாள்
அடித்து அடித்து ஒருகவிதை எழுதினேன்.
அதற்கும் அடுத்தநாள்
அதை அனுப்பிவைத்தேன்.
ஆனால்,
அதை முதல்வரின் கண்கள் வாசித்தபோதே
விரல்கள் கருத்தை எழுதி,
அது…
மறுபடியும் ஒலிக்கும் அந்தக் குரல்!
அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத்தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்.
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்!
மறுபடியும்…
ஆதி மொழிக்கு அவமானம்!
கர்நாடகா மேடையில்
தமிழ்த்தாய் வாழ்த்து
பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு
இடிவிழுந்த மண்குடமாய்
இதயம் நொறுங்கியது
ஒலிபரப்பாமல்
இருந்திருக்கலாம்;
பாதியில் நிறுத்தியது
ஆதிமொழிக்கு அவமானம்
கன்னடத்துக்குள்
தமிழும் இருக்கிறது;
திராவிடத்திற்குள்…
கொடுத்தல் என்பது யாதெனில்…!
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்கு கொடுக்கப் பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப் பட்டதல்ல!
உண்மையில் நீ கொடுக்கவில்லை!
உன் வழியாகக் கொடுக்கப் படுகிறது!…
தேயாத அன்பு தேவை…!
மரத்தின் ஒரு கிளையை மட்டுமல்ல
முழு விருட்சத்தையும் நேசி;
அப்போது உன் அன்பில்
கிளையும் அதிலுள்ள
இலையும் சருகும்
மொக்கும் மலரும்
உதிர்கிற இதழும்
உயரமும் தரையிலே
வீழும் நிழலும்
யாவுமே சிக்கும்;
வாழ்வை ஒருமிக்க நேசி
அந்த அன்பு
தேயாது...!
-…
‘சவால்’ – பசுவய்யா கவிதை…!
“நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.
வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மன வலியுண்டு.
ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்
எனது…
விடுதலைக்கு உழைப்பதே என் வேலை!
"உடல் தரும்
பிணிகளைத் தடைகளைப்
பொருட்டென எண்ணிடேன்!
என்னேர் உயிரினை
இழப்பினும் தயங்கிடேன்;
ஏற்றுள்ள கொள்கையே
பெரிதென்(று) இயங்குவேன்!
அன்னை மொழி, இனம்,
நாட்டினை எதிரிகள்
ஆள்வதை மீட்டிடும் வரை,
விழி உறங்கிடேன்!
இம்மா நிலந் தனில்
எண்ணிலா…