வயோதிகத்தை விழுங்கிய மரணம்!

வயோதிகம் மறித்தது நடுவழியில்
நான் காதலைத் தேடிச் சென்ற பொழுது

“விடு என்னை
இப்போதுதான் உணர்ந்து கொண்டேன் காதலின் அருமையை”
என்று அதன் காலில் விழுந்து கெஞ்சினேன்

‘சற்று முன்தான் நான் வயோதிகம்,
இப்போது மரணம்’ என்று
என்னை இறுகத் தழுவிக் கொண்டது
அது!

– பசுவய்யா

You might also like