யாருக்கானது இந்த பொருளாதார வளர்ச்சி?

செய்தி :   

10 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கு சாத்தியமானதுதான்.

தற்போதைய வளர்ச்சி வேகத்தையும், ஸ்டார்ட்அப் புத்தாக்கத்தையும் இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்தால் இந்த வளர்ச்சியை எட்டிவிடலாம்.

– மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கோவிந்த் கமெண்ட் : 

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் சொல்கிறபடி 10 சதவீத அளவுக்கான வளர்ச்சி சாத்தியமானதுதான்.

உலகளவில் சில ஏகாதிபத்திய நாடுகளினால் உருவாகும் பொருளாதார சீரழிவு சராசரியான மனிதர்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது.

லட்சக்கணக்கானவர்கள் வேலைகளை இழக்கும் சூழ்நிலையும் உருவாகிறது.

சிறு தொழில் செய்து வந்தவர்கள் காணாமல்போய்விட்டார்கள்.

விவசாயிகளும் நெசவாளர்களும் நொந்துபோன நிலையில் இருக்கிறார்கள்.

பல சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சியும் பணியாளர்கள் நிலையாமையை எப்போதும் உணர்ந்தபடி இதற்கிடையே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பாவப்பட்ட ஏழைகள் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேசமயம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் ஏஐ தொழில்நுட்பங்களைக் கையாண்டு பொருளாதார வளர்ச்சியை அடைகிறார்கள் என்றால், நம்முடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சி கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் சாத்தியப்படுகிறது. எளிய மக்களுக்கு அல்ல.

You might also like