செய்தி :
தவெகவை அதிமுக விரைவில் விழுங்கும்; ஜனநாயகப் படுகொலை செய்தவருக்கு தக்க பதிலடி கொடுங்கள்.
– அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.
கோவிந்த் கமெண்ட் :
நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளிவந்த உடனேயே போதுமான எண்ணிக்கை தவெகவிற்கு கிடைக்காத நிலையில், ரகசிய பேச்சுவார்த்தைகளெல்லாம் நடத்தியது யார்?
அப்போது, நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில் பல தலைவர்கள் பொதுவெளியில் போட்டு உடைத்தார்கள்.
அதில், அதிமுக எம்எல்ஏக்களும் கட்சியை விட்டு வெளியே வந்து, அதே குற்றச்சாட்டை சொன்னார்களே, அப்போதெல்லாம் உரிய பதிலளிக்கவில்லை எடப்பாடி பழனிசாமி.
ஆனால், தற்போது, தவெகவை அதிமுக விழுங்கப் போகிறது என்று சொல்வது நகைப்புக்குரிய ஒரு விசயம்தான்.
இவரைவிட அதிமுகவின் அசலான தொண்டர்கள், நடந்த உண்மையை நன்கு அறிவார்கள்.