குழந்தைகளுக்கு புத்தகத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால், எந்த மாதிரியான புத்தகங்களை கொடுக்கலாம்?.
ஒரு குழந்தைக்கு புத்தகத்தை அறிமுகப்படுத்தும்போது, நாம் முதலில் கவனிக்க வேண்டியது அந்தக் குழந்தையின் வயது மட்டுமல்ல; அதன் ஆர்வமும் கூட.
6–10 வயது குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே பெரிய இலக்கிய நூல்களையோ, அதிகமான எழுத்துகள் கொண்ட புத்தகங்களையோ கொடுப்பதைவிட, படங்கள் நிறைந்த கதைகள், விலங்குகளின் கதைகள், நகைச்சுவைக் கதைகள், சாகசக் கதைகள், புதிர்கள், அறிவியல் மற்றும் இயற்கை பற்றிய எளிய நூல்கள் போன்றவற்றை கொடுக்கலாம்.
குழந்தைக்கு புத்தகத்தை கொடுத்துவிட்டு,
“இந்தப் புத்தகத்தை படித்தே ஆக வேண்டும்” என்று கட்டாயப்படுத்தாமல்,
“இந்தப் புத்தகத்தில் உனக்கு எந்தப் படம் பிடித்திருக்கிறது?”
“இந்தக் கதையில் அடுத்து என்ன நடக்கும்?”
“இந்தக் கதாபாத்திரம் உனக்கு பிடித்திருக்கிறதா?” என்று அவர்களுடன் சேர்ந்து பேச வேண்டும்.
அப்படி செய்யும்போது, குழந்தைக்கு புத்தகம் என்பது படிக்க வேண்டிய ஒரு பொருள் அல்ல; மகிழ்ச்சியாக நேரம் செலவிடும் ஒரு நண்பன் என்ற எண்ணம் உருவாகும்.
அதன்பிறகு படிப்படியாக,
என்று அவர்களின் வாசிப்பு உலகத்தை விரிவுபடுத்தலாம்.
முக்கியமாக, குழந்தைக்கு புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் கொடுங்கள். “இந்த இரண்டு புத்தகங்களில் உனக்கு எது பிடிக்கும்?” என்று கேட்டுப் பாருங்கள்.
அவர்கள் தாங்களாகத் தேர்ந்தெடுக்கும் புத்தகத்தைப் படிக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
குழந்தைக்கு நாம் கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசுகளில் ஒன்று ஒரு நல்ல புத்தகம்.
ஆனால், எல்லாவற்றிற்கும் முதல்படியாக, ‘புத்தகம் படிப்பது ஒரு சுமையல்ல… அது ஒரு அழகான அனுபவம்’ என்ற எண்ணத்தை குழந்தையின் மனதில் உருவாக்குவதுதான் மிக முக்கியமான கடமை.
– பேசும் புத்தகங்கள் முகநூல் பதிவிலிருந்து.