தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு!

தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று (ஜூன் 16) மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிடுகிறார்.

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதி நிலை, கடன் சுமை மற்றும் முந்தைய நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.

அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.

துறைவாரியான வருவாய், செலவினங்கள் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை குறித்த முக்கிய தகவல்கள் இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

– வைஷ்ணவி பாலு

You might also like