ஒரு யூனிட் ரத்தம்: பல உயிர்களுக்கு நம்பிக்கை!

ரத்த தானம் – ஒருவர் தனது ரத்தத்தை மற்றொரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வழங்கும் உயரிய மனிதநேயச் செயல் ஆகும்.

செயற்கையாக உருவாக்க முடியாத ரத்தத்தை தேவைப்படுவோருக்கு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

18 முதல் 60 வயதுக்குள் உள்ள, குறைந்தது 45 கிலோ எடை கொண்ட, நல்ல உடல்நலத்துடன் தொற்றுநோய்கள் இல்லாதவர்கள் ரத்த தானம் செய்யலாம்.

ஆண்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், பெண்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்த தானம் செய்யலாம்.

ரத்த சோகை, தலசீமியா, புற்றுநோய் சிகிச்சை பெறுவோர், விபத்தில் காயமடைந்தோர் உள்ளிட்ட பலருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

ஆரோக்கியமானவர்கள் தகுதியுள்ள நேரங்களில் தொடர்ந்து ரத்த தானம் செய்யலாம்.

இதை வலியுறுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ஆம் தேதி உலக ரத்த தான தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், தன்னார்வ அமைப்புகள் நடத்தும் ரத்த தான முகாம்கள் உள்ளிட்ட இடங்களில் ரத்த தானம் செய்யலாம்.

விபத்துகள், அறுவை சிகிச்சைகள், பிரசவ கால ரத்தப்போக்கு, புற்றுநோய் சிகிச்சை மற்றும் பரம்பரை ரத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற ரத்தம் அவசியமாகிறது.

பாதுகாப்பான ரத்தம் அனைவருக்கும் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதே ரத்த தானத்தின் முக்கிய நோக்கம்.

ரத்த தானம் செய்ய விரும்புவோர் முதலில் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். தகுதியானவர்கள் பாதுகாப்பான முறையில் ரத்தம் வழங்குவர்.

சேகரிக்கப்பட்ட ரத்தம் பரிசோதிக்கப்பட்டு, தேவைப்படும் நோயாளிகளுக்கு ரத்த வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.

எனவே,  நாமும் ரத்தம் வழங்குவதற்கான தகுதியுடன் இருந்தால் ரத்தம் வழங்கி உயிர்களைக் காப்போம்.

– சு. சுரேகா

#World_Blood_Donor_Day #உலக_ரத்தக்_கொடையாளர்_தினம் #ரத்த_தானம் #மனித_உடல் #ரத்தம் #ரத்த_வங்கி #குருதிக்_கொடை #பிளாஸ்மா #சிவப்பணுக்கள் #கர்ப்பிணி #அறுவைச்_சிகிச்சை #புற்றுநோய் #தலஸமியா #ஹீமோபிலியா #கார்ல்_லேண்ட்ஸ்டெய்னர் #Blood_Donation #Human_Body #Blood #Blood_Bank #Blood_Donation #Plasma #Red_Cells #Pregnancy #Surgery #Cancer #Thalassemia #Hemophilia #Karl_Landsteiner
vels
You might also like