என்றும் மறக்க முடியாத எஸ்.வி.ரங்காராவ்!

30 ஆண்டு திரை வாழ்க்கையில் தமிழில் 53 படங்கள், தெலுங்கில் 109 படங்கள் என மொத்தம் 163 படங்களில் நடித்துள்ளார் எஸ்.வி.ரங்காராவ். நடிப்பதோடு மட்டுமல்லாமல் தெலுங்கில் இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

இந்த இரண்டு படங்களும் ஆந்திர அரசின் நந்தி விருதை வென்றது. ‘நர்த்தன சாலா’ திரைப்படத்தில் அவர் நடித்த கீசகன் கதாபாத்திரத்துக்காக ஆப்ரிக்க ஆசிய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

தமிழில் கடைசியாக 1974-ல் நடித்த ‘அன்புச் சகோதரர்கள்’ படத்தில் ‘முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக, அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக’ என பாடி குணச்சித்திர நடிப்பால் அனைவரையும் சொக்க வைத்திருப்பார்.

ரங்காராவ் அவர்கள் ராவணன், துரியோதனன், பீஷ்மர், அக்பர், கீசகன், ஹிரண்ய கஷிபு, நரகாசுரன், கம்சன், உக்கிரசேனன், எமன், கடோத்கஜன் என அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் வித்யாசம் காண்பித்திருப்பார்.

1957-ல் வெளியான ‘மாயா பஜார்’ படத்தில் கடோத்கஜனாக நடித்த ரங்காராவ், இரு மொழிகளிலும் தவிர்க்க முடியாத நடிகராக முத்திரை பதித்த எஸ்.வி.ரங்காராவ் என்றும் மறக்க முடியாத நடிகர்.

குறிப்பு: எஸ்.வி.ரங்காராவ் அவர்கள் பெர்க்கிலி சிகரெட் விளம்பரத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

நன்றி: பிரசாந்த் முகநூல் பதிவு

You might also like