புகைப்பதை நிறுத்திய 8 நிமிடங்களில்…!

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதை நிறுத்தும்போது என்னென்ன நடன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்வோம்.

உடனடியாக…

புகைபிடிப்பவர்கள் அதை நிறுத்தும்போது புகைத்து வெளியேற்றிய காற்றால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்குள்ளாவது தடுக்கப்படுகிறது.

20 நிமிடங்களில்…

ரத்த அழுத்தம் இயல்புநிலைக்குத் திரும்புகிறது. ‘பல்ஸ் ரேட்’ இயல்பாகிறது. கை, காலில் அதிகரித்த வெப்பம் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

8 மணி நேரத்தில்…

ரத்தத்தில் கார்பன் மோனாக்சைட் அளவு குறைந்து இயல்புநிலைக்குத் திரும்புகிறது.

ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. அல்லது இயல்பு நிலைக்கு வருகிறது.

48 மணி நேரத்தில்…

நரம்பு மண்டலத்தின் கடைக்கோடி முனை மறுவளர்ச்சியடைகிறது. நுகரும் மற்றும் சுவைத் திறன் அதிகரிக்கிறது.

2-12 வாரங்களில்…

மூச்சுவிடும் திறன் மேம்படுகிறது. ரத்த ஓட்டம் மேம்படுகிறது. நடப்பது எளிமையாகிறது.

1-9 மாதங்களில்…

தொடர் இருமல் மற்றும் சைனஸ் பிரச்சனை குறைகிறது. மூச்சுத்திணறல் பிரச்சனை குறைகிறது. ஒட்டுமொத்த ஆற்றல் மேம்படுகிறது.

நுரையீரல் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறனும், கிருமிகளை எதிர்க்கும் திறனும் அதிகரிக்கிறது.

1 ஆண்டில்…

இதய நோய்க்கான வாய்ப்பு பாதியாகக் குறைகிறது.

5 ஆண்டுகளில்…

பக்க வாதத்துக்கான வாய்ப்பு குறைந்து புகைபிடிக்காதவர்களுக்கு இணையான நிலைக்குத் திரும்புகிறது.

வாய், தொண்டைப் புற்றுநோய்க்கான வாய்ப்பு, புகைபிடிப்பவர்களுக்கு உள்ளதைக் காட்டிலும் பாதியாகிறது.

10 ஆண்டுகளில்…

வாழும் காலம் புகைப்பழக்கம் இல்லாதவர்களைப் போன்று இயல்பாகிறது.

புகைப்பவர்களைக் காட்டிலும் நுரையீரல் புற்றுநோய்க்கான வாய்ப்பு பாதியாகக் குறைகிறது.

வாய், தொண்டை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்று கணையம் புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

15 ஆண்டுகளில்…

இதயத் திசுக்களுக்கு ரத்தம் செல்லும் குழாய்களில் ஏற்படும் நோய்க்கான வாய்ப்பு, புகைப்பிடிக்க ஆனவர்களுக்கு உள்ள நிலைக்குத் திரும்புகிறது.

நன்றி: ஆனந்த விகடன் 

You might also like