ஜாதியற்ற சமூகத்தின் அவசியம்!

நூல் அறிமுகம்:

சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம்.

நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது.

பிறப்பு அடையாளங்களைக் கடந்து ஒவ்வொருவருக்குமான அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட்டன.

நன்மக்களாக அதை மதித்து, சகோதரத்துவத்துடன் நடப்பதைத்தவிர, உண்மையான தேசப்பற்று வேறு என்னவாக இருக்கமுடியும்?

வாசக சாலை விருது பெற்றுள்ள இந்நூல் சாதி, மதம், இனம், பால் போன்ற பிரிவினைகளைக் கடந்து, நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் படைக்கப்பட்டுள்ளது.

உங்கள் மனிதம் ஜாதியற்றதா? நூல், சமகால இந்தியச் சூழலில் மனிதநேயம் மற்றும் ஜாதியற்ற சமூகத்தின் அவசியம் குறித்து விவாதிக்கிறது.

********

நூல் : உங்கள் மனிதம் ஜாதியற்றதா?
ஆசிரியர்: ஜெயராணி 
எதிர் வெளியீடு
விலை: ரூ.209

You might also like