தமிழ்த் திரையின் முதல் சூப்பர் சக்ஸஸ் ஜோடி!

தமிழ்த் திரைப்பட வசனங்களில் மாற்றத்தை உண்டாக்கிய இளங்கோவனின் வசனத்தில் வெளியான ‘கண்ணகி’ திரைப்படத்தில் கோவலனாக நடிப்பின் எல்லை தொட்ட பி.யூ.சின்னப்பா, சினிமாவில் தனக்கேற்ற சிறந்த இணையாகக் கண்ணாம்பாவை இனம் கண்டுகொண்டார்.
 
இத்திரைப்படத்தில் பி.கண்ணம்பாவின் வசன உச்சரிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
 
அதைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நடித்த அடுத்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘மங்கையர்க்கரசி’. இதன் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 6 படங்களில் பி.யூ.சின்னப்பாவும் கண்ணாம்பாவும் ஜோடியாக இணைந்து நடித்தனர்.
 
கண்ணாம்பாவின் சொந்தத் தயாரிப்பான ‘ஹரிச்சந்திரா’வில் நாயகன் பி.யூ. சின்னப்பா நடித்தார்.
 
தமிழ்த் திரையின் முதல் சூப்பர் சக்ஸஸ் ஜோடியாக பி.யூ.சின்னப்பாவும் கண்ணாம்பாவும் இருந்தார்கள் என்றால் அது மிகையல்ல.
You might also like