செய்தி:
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,000 வழங்கப்படும்.
– பிரதமர் மோடி அறிவிப்பு
கோவிந்த் கமெண்ட்:
வாக்காளரின் ஓட்டுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் தனி மதிப்பிருக்கிறது. ஏறத்தாழ ஏலம் விடும் பொருளைப் போல வாக்கும் மாறிவிட்டது.
தமிழ்நாட்டில் ஒரு கட்சி 2000 ஒரு தரம் என்கிறார், இன்னொரு நடிகர் இடையில் புகுந்து 2500 இரண்டு தரம் என்கிறார்.
மேற்கு வங்கத்தில் பேசிய மோடியோ ஏலத்தொகையை இன்னும் உயர்த்தி வாக்குக்கு 3000 மூணு தரம் என்கிறார்.
ஜனநாயகத்தில் வாக்கு எப்படியெல்லாம் ஏலம் விடப்படும் பொருளாகிவிட்டது.
யோகி பாபுவின் ஒரு படத்தில் இடம்பெற்ற காட்சியைப் போல!