செய்தி:
திமுகவுடன் முதன் முதலில் இணைந்துள்ளோம்; எங்கள் கூட்டணியை ஒட்டுமொத்த மக்களும் விரும்புகிறார்கள்!
- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
இதுவரை அதிமுகவுடனும் மக்கள் நலக் கூட்டணி என்று பல கூட்டணிகளில் அங்கம் வைத்து எத்தகைய வாக்கு சதவீதத்திற்கு தேமுதிக இறங்கி வந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
தற்போதைய தேர்தலில் 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் தேமுதிகவால் வாங்க முடிந்திருக்கிறது.
இதை திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இன்னும் அவ்வளவாக செரித்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் பிரேமலதா தன்னுடைய பேச்சின் வீரியத்தைக் குறைத்துக் கொள்வது அவருக்கும் அவரது தேமுகவுக்கும் நல்லது.