கலைவாணரின் அறிவுரையைக் கடைசிவரைப் பின்பற்றிய எம்ஜிஆர்!

நடிகர் ராஜேஷ் பகிர்ந்து கொண்ட அனுபவப் பதிவு

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களிடம் பல நடிகர்கள் சீடர்களாக இருந்தார்கள்.

அவர்களில் முக்கியமானவர்கள் காகா ராதாகிருஷ்ணன், குலதெய்வம் ராஜகோபால், சி.எஸ்.பாண்டியன், புளிமூட்டை ராமசாமி, கொட்டாப்புளி ஜெயராமன் போன்றவர்கள் இருந்தார்கள். அவர்களில் நடிகர் தங்கவேலுவும்ஒருவர்.

கலைவாணர் மரணமடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, தன்னிடம் இருந்த நடிகர்களிடம், “ராமச்சந்திரன் ரொம்ப நல்லவன்டா. அவனை பத்திரமா பார்த்துக் கொள்ளுங்கள். அவனுக்கு ஒரு கஷ்டமும் வரக்கூடாது. அவனுடைய மனம் நோகக் கூடாது” என்று சொல்லியிருக்கிறார்.

அதுபற்றி தங்கவேலு என்னிடம் சொல்லும்போது, “ஆனால் உண்மையில் எம்.ஜி.ஆர் தான் எங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.

அதோடு, கலைவாணர் எம்.ஜி.ஆரிடம், “ராமச்சந்திரா! எந்தக் காலத்திலும், மறந்தும் விளையாட்டாகக் கூட மதுவைத் தொட்டுவிடாதே, பல கலைஞர்களின் வாழ்க்கையை உனக்கு ஒரு பாடமாக எடுத்துக் கொள்” என்றும் சொன்னார், கலைவாணரின் அந்த அறிவுரையை, எம்ஜிஆர் கடைசிவரை பின்பற்றினார்.

கலைவாணர் மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தார். எம்.ஜி.ஆர் மக்களுக்கு கொட்டி கொட்டி கொடுத்தார்.

தகவல்: என்.எஸ்.கே. நல்லதம்பி

You might also like