செய்தி:
தமிழக வெற்றிக் கழகம் நடத்திய விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியைப் பணியிடை நீக்கம்.
– கல்வி அதிகாரி நடவடிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
பொதுவாக தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சிகள் நடன நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன.
அதில் அந்தந்தக் கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்களும் இளம்பெண்களும் சமயங்களில் சிறு குழந்தைகளும் கூட ஆடுவதைப் பார்க்க முடிகிறது.
இதே மாதிரி தான் தவெகவின் அரசியல் மேடையிலேயே போய் துணிச்சலாக நடனமாடி இருக்கிறார் தலைமை ஆசிரியை. அதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
எப்படியெல்லாம் பள்ளித் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வழிகாட்டுகிறார்கள்?