திமுகவுக்கு திருமாவின் தோழமையான வேண்டுகோள்!

செய்தி:

கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கோருவது ஏற்புடையது அல்ல: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தோழமையோடு வலியுறுத்தல்.

கோவிந்த் கமெண்ட்:

திமுகவுடன் பல்வேறு கட்சிகள் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடந்த போதிலிருந்தே அவர்களுடைய அந்தந்த கட்சிகளின் சொந்தச் சின்னத்தை விடுத்து, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தியதாக பரவலாகவே புகார்கள் எழுந்திருக்கின்றன.

இத்தகைய புகார் எழுந்ததன் பின்னணியிலேயே, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமலஹாசன்.

இதைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல். திருமாவும் திமுகவுக்கு மிகவும் தோழமை உணர்வுடன் “தங்களது சுய அடையாளங்களுக்கு மதிப்பு கொடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதோடு, கமலஹாசன் கூட்டணியை விட்டு வெளியேறிருப்பது குறித்தும், அவரை சொந்தக் கட்சி சின்னத்தில் நிற்க திமுக தலைமை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அந்த விதத்தில், விசிக தலைவரான தொல்.திருமாவளவன் மிகவும் நியாயமான உணர்வுடனும் ஜனநாயக உணர்வுடனும் கருத்து சொல்லியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று.

You might also like