செய்தி:
பயனுள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதால், ஈரானின் மின்நிலையங்களை 5 நாட்களுக்குத் தாக்க மாட்டோம்.
– அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.
கோவிந்த் கமெண்ட்:
டிரம்ப் இன்றைக்கு சொல்கிற பயனுள்ள பேச்சுவார்த்தையை அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து முதலில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பே யோசித்து செயல்படுத்தி இருக்கலாமே?
தற்போது, போர் வலுத்து வரும் நிலையில், போரைத் தூண்டி விடுகிற மாதிரியான செயல்பாடுகள் ஒருபுறம் இருக்கையில், மறுபுறம் இத்தகைய பயனுள்ள பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக டிரம்ப் சொல்வதை, போரினால் பாதிக்கப்பட்டிருக்கிற நாடுகள் எந்த அளவுக்கு நம்பும்?