நீதியரசர் பெயரில் திறக்கப்பட்ட நினைவுக் குடில்!

மாண்புமிகு முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு S.ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் தொண்ணுற்றி ஐந்தாம் ஆண்டு பிறந்தநாளான்று (13-03-2024) அவரது நற்பெயரைக் கொண்ட சிறிய கட்டிடத்தை அவரது மூத்த புதல்வரும் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், தற்போது தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவருமான மாண்புமிகு நீதியரசர் திரு R சுப்பையா மற்றும் அவரது துணைவியார் சகோதரி திருமதி உமாமகேஸ்வரி ஆகியோர் காணொளி மூலம் திறந்து வைத்தனர்.

அதைத் தொடர்ந்து, தற்போது அவரது பெயரைத் தாங்கி நிற்கும் ‘குடில்’ உருவாக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனுர் சிறுமலை அடிவாரத்தில் உருவாகியுள்ள இந்தக் குடிலில், அவரது நினைவுகளைப் போற்றும் ஓவியங்கள், தீர்ப்புரைகள் போன்றவற்றை வரும் தலைமுறைகள் அறிந்துகொள்ளுமாறு நூலகத்தோடு கூடிய அறிவாலயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புனிதமான இந்தக் குடில் அண்மையில் (07.02.2026) திறக்கப்பட்டது.

இந்தப் புதிய கட்டடத்தையும் அவரது திருவுருவப்படத்தையும் நீதியரசர் திரு எஸ்.சுப்பையா திறந்து வைக்க, அவரது மனைவி திருமதி. உமாமகேஸ்வரி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

முன்னாள் காவல்துறை உயர் அலுவலர், வழக்கறிஞர் பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. திருமிகு. சுவாமிநாதன் I.P.S., அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன், திரு. அலோயஸ், மாமன்ற உறுப்பினர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

You might also like