செய்தி:
வெளிநாடுகளுக்குச் சென்று ஸ்கேன் பரிசோதனை செய்து கருவின் பாலினத்தைத் தெரிவித்தால் கடும் நடவடிக்கை.
தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!
கோவிந்த் கமெண்ட்:
குழந்தை பிறப்பது ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்துகொண்டு கருச்சிதைவுக்கு குடும்பத்தினரே தயாராகி விடுகிறார்கள் என்பதால், இங்கு அத்தகைய ஸ்கேன் எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.
ஒருவேளை வெளிநாடுகளுக்குப் போய் ஸ்கேன் செய்து பார்க்க எந்தத் தடையும் இல்லை என்றால், இனிமேல் பட்ஜெட்டில் சொன்னபடி இதற்கென மெடிக்கல் டூரிசம் உருவாகிவிடும் ஆபத்து இருக்கிறது.